Posted by Editor on November 13, 2017
கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு வித்தியாவின் தாய்

எமது நாட்டில் தூக்குத் தண்டனை கொண்டு வரப்பட வேண்டும். மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். 

வித்தியாவை மிகக் கொடுமையான பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் சந்தோஷமான விடயம். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லையே. ஏன் மரண தண்டனையை நிறைவேற்ற எமது நாட்டில் சட்டத்தில் இடமில்லையா? அப்படியெனில் ஏன் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

எமது நாட்டில் சட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டால் குற்றங்கள் கூடிக் கொண்டேதான் இருக்கும். எமது நாட்டில் தற்பொழுது  கொலைகள் தினந்தோறும் நடந்துக் கொண்டிருக்கின்றது. பாலியல் வன்கொடுமை அளவுக்கதிகமாக அறங்கேறிக் கொண்டிருக்கின்றது. இதை எப்போது இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறுத்தப்; போகிறது? பொது மக்கள் நிம்மதியாக வாழ முடியாத பட்சத்தில் இந்த நல்லாட்சி அரசாங்கம் எதற்கு?

எமது நல்லாட்சி அரசாங்கத்தின் மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்கள் மிக மிக நல்லவர், காருண்யமிக்கவர், மனித நேயம் உள்ளவர். இப்படிப்பட்ட ஒருவரால் குற்றவாளிகள் நிறைந்திருக்கும் எமது நாட்டை எப்படி ஆள முடியும்? சர்வ அதிகாரமும் பொருந்திய ஜனாதிபதி அவர்களே நீங்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றுங்கள்.

ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சட்டங்களை நீங்கள் கடுமையாக்காவிட்டல் குற்றங்கள் நாட்டில் கூடிக் கொண்டேதான் போகும். நீங்கள் நிலையான ஆட்சியை நடத்த முடியாத நிலைமைக்கு அது கொண்டு போய்விடும். அடுத்த தேர்தலில் உங்களுக்கு வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும். ஆகையால் நீங்கள் சட்டத்தை கடுமையாக்குங்கள்;. பாரதூரமான குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல் படுத்துங்கள்.

எமது இலங்கை வாழ் மக்களே எமது நாடு பௌத்த நாடு இங்கு தூக்குத் தண்டனை கொண்டுவர முடியாது என்று கூறுவார்களேயானால் சொல்லுங்கள் சீனா ஒரு பௌத்த நாடு அங்கு தூக்குத் தண்டனை இல்லையா? ஜப்பான் ஒரு பௌத்த நாடு அங்கு தூக்குத் தண்டனை இல்லையா? தாய்வான் ஒரு பௌத்த நாடு அங்கு தூக்குத் தண்டனை இல்லையா? பர்மா ஒரு பௌத்த நாடு அங்கு தூக்குத் தண்டனை இல்லையா? ஏன் இந்தியாவில் கூட தூக்குத் தண்டனை உள்ளது. இவ்வளவு ஏன் ஐக்கிய நாடுகள் சபை அமைந்துள்ள அமெரிக்காவில் கூட மரண தண்டனை பலவிதமாக நிறைவேற்றப்படுகின்றது. அப்படி இருக்கும் போது ஏன் நமது நாட்டில் கொண்டுவரக் கூடாது.

ஆகையால் மக்களே மனதால் ஒன்றிணைவோம். மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்கின்ற சிந்தனையோடு எமது மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கு தூக்கு தண்டனையை கொண்டு வரும்படி ஒவ்வொருவரும் இச்செய்தியை பிரதி செய்து அனுப்புவதன் மூலமாக, தூக்கு தண்டனை கொண்டு வரப்படும் வரை இத்தகவலை அனுப்பிப் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் எமது பிரதம மந்திரிக்கும் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
அரசியல்வாதிகளே தூக்குத் தண்டனையை கொண்டு வருவதற்கு நீங்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் பேச வேண்டும். மக்களின் குறைகளை தீர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் உள்ளது. உங்களால் மக்களுக்கு நல்லது நடந்தால் அது உங்களுக்கு நல்லதாக அமையும். தூக்குத் தண்டயை யார் கொண்டு வருகிறார்களோ அந்த அரசியல் தலைவர்களுக்கு மக்களின் செல்வாக்கு கிடைக்கப்பெறும்.
 
உதாரணமாக சிந்தித்துப் பாருங்கள் இப்பொழுது 1187 மரண தண்டனைக் கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி எவ்வித வேலைகளும் செய்யாமல் நேரத்திற்கு நேரம் உணவு வழங்கி அவர்களுக்கு ஏதாவது வருத்தம் ஏற்பட்டால் வைத்தியசாலையில் அனுமதித்து, குணமாக்கி எக்கச்சக்கமாக செலவு செய்கிறார்கள். இந்தச் செலவுகள் எல்லாம் யாருடைய பணத்தில் மேற்கொள்ளப்படுகின்றன? அவர்களுக்கு செலவு செய்யும் தொகை எவ்வளவு? ஒரு மரண தண்டனை கைதிக்கு நீங்கள் இவ்வளவு தொகை செலவையும் செய்யும் போது இதனை அறிந்து கொள்ளும் ஏனையவர்களும் வெளியில் இருப்பதை விட சிறையில் இருப்பதைத்தான் விரும்புவார்கள். எமது நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க் காரணம் சட்டங்கள் திருத்தப்படாமையே. இப்படியே போனால் எமது நாட்டில் சிறைச்சாலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைமையே ஏற்படும். ஒரு குற்றம் நிரூபிக்கப்படவே குறைந்தது 10 வருடங்களாவது கடந்து விடுகிறது. அப்படியெனில் நாட்டில் நீதிமன்றங்களும் அதிகரித்துக் கொண்டே போக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். 
 
எமது நாட்டில் நிம்மதியாக மக்கள் வாழ வேண்டுமெனில் அதற்கு ஏற்ற சட்டங்களை உருவாக்க வேண்டும். மேலும் அச்சட்டங்கள் கடுமையாக்கப்படவும் வேண்டும். முதலில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டிலுள்ள மரண தண்டனைக் கைதிகள் அனைவருக்கும் உடனடியாக குறித்த அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும். களவு செய்பவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூர் நாட்டில் வழங்கப்படுவதைப் போன்று கசையடி வழங்கி தண்டனை வழங்க வேண்டும். அதுவும் பொது மக்கள் கூடும் ஒரு பொது இடத்தில் வைத்து பொது மக்கள் முன்னிலையில் அத்தண்டனை வழங்கப்படல் வேண்டும். சிறு களவுகளுக்கு 12 கசையடிகளும், பெரிய களவுகளுக்கு 100 கசையடிகளும் வழங்க வேண்டும். 
பாலியல் குற்றம் செய்யும் ஆண்களின் ஆணுறுப்பை நெருப்பினால் சுட வேண்டும். இப்படி குற்றங்களுக்கு அதற்கேற்றாற் போல் தண்டனைகள் வழங்கப்பட்டாலே ஒழிய குற்றங்கள் குறைவதற்கு வேறு வாய்ப்பில்லை. இந்தச் சட்டங்களை மக்கள் அறிந்து கொண்டால் மேலும் இப்படியான குற்றங்களைச் செய்ய மாட்டார்கள். 
 
எமது மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே.. மரண தண்டனைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். நீங்கள் வித்தியாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு வீடு வழங்கியது எல்லாமே உங்களது மனித நேயமும் கருணையுள்ளமுமே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் எம்மைப் பொருத்தவரை வித்தியா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தக் கொலை யானது கொலை செய்யப்பட்ட விதம் யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடூரமான பாலியல் வன்புணர்வுக் கொலையாகும். அப்படியான கொடூர கொலை யாளிகளுக்கு நீங்கள் வழங்கியுள்ள தண்டனையானது மரண தண்டனை எனும் பெயரில் சிறைச்சாலை உல்லாச வாழ்க்கையாகும். இதனால்தான் எமது இலங்கை நாட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 
 
ஜனாதிபதி அவர்களே உங்களுக்கே நன்கு தெரியும் தற்பொழுது எமது நாட்டில் தினந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. நீங்கள் உடனடியாக இதைக் கவனத்தில் எடுத்து இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் மரண தண்டனை எனும் பெயரில் கொலையாளிகளுக்குக் கிடைத்திருக்கும் உல்லாச வாழ்க்கையே இதுவென்பது கொலையாளிகளுக்கு நன்கு தெரியும். எத்தனை கொலைகள் செய்தாலும் சிறைச்சாலைகளில் உல்லாசமாக வாழலாம் என்பது கொலையாளிகளுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அரிய வரப்பிரசாதமாகும். ஒரு கொலை செய்து சிறைச் சென்று வெளியே வந்துவிட்டால் அவர்கள் பாதாள உலக தலைவன் என்ற அந்தஸ்து வேறு கிடைத்துவிடும். மேலும் அதன் பிறகு அவர்களுக்கு அரசியல்வாதிகள் செல்வாக்கும் கிடைத்துவிடும். அத்துடன் அவர்களுக்கு மக்களும் பயம் கலந்த மரியாதை அளிக்கத் தொடங்குகின்றார்கள். 

மக்களே! மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கும், கௌரவ பிரதமர் அவர்களுக்கும் இன்றிலிருந்த குறுந்தகவல் (ளுஆளு), மின்னஞ்சல் அனுப்பும் பணி தொடரட்டும். மரண தண்டனைகள் நிறைவேற்றப்படட்டும். மக்கள் எவ்வித அச்சமம் இன்றி நிம்மதியாக வாழ வழி பிறக்கட்டும்.

மனதால் ஒன்று படுவோம். மாற்றத்தை கொண்டு வருவோம். 
 
இத்தகவலை ஜனாதிபதிக்கு கொண்டு செல்லும் வகையில், தூக்கு தண்டனையை கொண்டு வரும்படி ஒவ்வொருவரும் "ஜனாதிபதியிடம் தெரிவிக்க" (https://tell.president.gov.lk) எனும் தளத்தில் https://tell.president.gov.lk/grievance/showAddGrievance.mvc எனும் பகுதியில் இச்செய்தியை பிரதி செய்து அனுப்புவதன் மூலமாகவோ அல்லது ஜனாதிபதி செயலகத்தின் [email protected] எனும் மின்னஞ்சலுக்கு இதனை அனுப்புவதன் மூலமாகவோ தூக்கு தண்டனையை கொண்டு வரும்வரை தகவல் அனுப்பிப் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் எமது பிரதம மந்திரிக்கும் பிரதமர் அலுவலக மின்னஞ்சலான  [email protected] இற்கும் அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

Categories: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற