Posted by Editor on January 15, 2018

கிளிநொச்சியில் 94 பாடசாலைகளில் கால்கோள் விழா

கிளிநொச்சி கல்வி வலயத்தில் இன்றைய தினம் (15) 94 பாடசாலைகளில் கால்கோள் விழா நடைபெற்றுள்ளது என கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்  நிகழ்வுகள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது. 

புதிதாக தரம் ஒன்றில்  சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் சம்பிரதாயபூர்வமாக சமய வழிபாடுகளை தொடர்ந்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாடசாலையின் முதல் நாளை மகிழ்ச்சியான நாளாக இருக்கும் வகையில் கால்கோள் விழாக்கள் இடம்பெற்றுள்ளன.

அத்தோடு கிளிநொச்சி வலயத்தின் வலய மட்ட கால்கோள் விழாக இவ்வருடம் கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

 

வித்தியாரம்ப விழா

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட அறபா வித்தியாலத்தின் ஏடுதுவங்கும் வித்தியாரம்ப விழா இன்று(15) பாடசாலை அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. 

விசேட துஆ பிரார்த்தனைகளுடன் ஆரம்பம் செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதிதிகள், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின பங்கு பற்றுதலுடன் தரம் ஒன்றின் புதிய மாணவர்களுக்கு ஏடு துவக்கம் செய்து வைக்கப்பட்டது.

(எம். தமிழ்செல்வன், ரி.கே. ரஹ்மதுல்லா)

Categories: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற