Posted by Editor on June 11, 2018

அம்பலாங்கொட, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பலாங்கொட, இரத்தினபுரி, தெனியாய மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

புதிய லக்ஷபான - பலாங்கொட ஊடான 132 கிலோவாட் மின்சார பாதையில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, குறித்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

குறித்த நிலைமையை சீர் செய்வதற்கான நடவடிக்கைக்காக, குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Categories: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற