Posted by Editor on August 16, 2018

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை (17) நிறைவடைகிறது.

அதற்கமைய, நாளை (17) வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் முஸ்லிம் பாடசாலைகள், எதிர்வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகள் யாவும் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி நோன்பிற்காக இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறைக்காக ஜூன் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.

அதனையடுத்து, நாளையதினம் (17) இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இவ்விடுமுறைக்குள், எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற