Posted by Editor on July 26, 2018

பிக் பாஸ் வீட்டிற்குள்ளே இருப்பவர்கள் தங்களைப் போட்டியாளர்கள் என்பதை மறந்து, பாண்டியர், சோழர் மன்னர்களாக நினைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் வாழ்ந்து வந்தார்கள். `குண்டூர் என்து, நெல்லூர் உன்து, காக்கிநாடா என்து, பாவாடை நாடா உன்து...' என்றபடி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இடங்களைப் பிரித்துக்கொண்டார்கள் போட்டியாளர்கள். மன்னிக்கவும் சோழர், பாண்டிய மன்னர்கள். இந்த ஏரியா பிரிக்கும் வேலைக்குப் பிறகு பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

பாலாஜி - ரித்விகா - மிட்நைட் மசாலா

* இரவோடு இரவாக `எங்க ஏரியா உள்ள வராதே' டாஸ்க் நிறைவுக்கு வந்துவிட்டது. ரித்விகா அன்று இரவுக்கான டின்னரை சமைத்துக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த பாலாஜி ஏதோ பேசிக்கொண்டிருக்கையில், `என்கிட்ட இருக்கிற எதுடா உன்னை ஹெவியா லைக் பண்ண வெச்சுச்சு' எனச் சொல்லி கன்னத்தில் கிள்ளப் போனார். `ஸ்ஸ்ஸ்... எதுவுமே இல்லை' எனச் சொல்லி, முகம் சுழித்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார், ரித்விகா. பாலாஜியும் சிரித்தபடி சமாளித்துவிட்டார். இன்னொரு பக்கம் `ஶ்ரீராம், ஜெய ஜெயராம்' என 101 முறை சொல்லி தூங்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார், ஐஸ்வர்யா. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பார்த்து ஒரு வேளை ஆன்மிக அரசியலில் இறங்கப்போறாரோ? 

* அடுத்த டாஸ்க்கில் டேனியலுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கையில் அடிபட்டுவிட்டதுபோல!. விரலில் கட்டுப் போட்டு சுற்றிக்கொண்டிருந்தனர். ஷாரிக், சென்றாயன், மஹத், ஜனனி, ஐஸ்வர்யா, டேனியல் ஆகியோர் நீச்சல் குளத்தில் கால் நனைத்தபடி தங்களது வெளிநாட்டுப் பயணங்களின் அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். மஹத் தனது ஆஸ்திரேலிய சுற்றுலா அனுபவங்களை நெகிழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் பிரமித்துக் கேட்டுக்கொண்டிருந்த சென்றாயன், `அங்க மக்கள்லாம் சகஜமாப் பேசுவாங்களா' என மஹத்திடம் ஏக்கத்தோடு கேட்டார். `இங்கே இருக்கிற மாதிரியெல்லாம் இல்லை. அங்கே எல்லோரும் செம ஜாலியா பேசுவாங்க. அங்க ஹில்டாப்னு ஓர் இடம் இருக்கு. நீ என்னோட அங்கே வா. உனக்கு வேற உலகத்தைக் காட்டுறேன்' என மஹத் சொல்லியதும், சென்றாயன் முகம் பளிச்சென மின்னியது. என்ஜாய் சென்றாயன் ப்ரோ!

மும்தாஜ்

* இந்தக் கூட்டத்தில் மும்தாஜ், வைஷ்ணவி, யாஷிகா, பொன்னம்பலம் ஆகிய நான்கு பேரும் மிஸ்ஸிங். அவர்களுக்கு பிக் பாஸ் ஏதோ கடுமையான டாஸ்க் கொடுத்திருப்பார் போல!. `இந்த டாஸ்க் செஞ்சதால என்னுடைய ஃபேவரைட் பேன்ட் கிழிஞ்சிருச்சு' எனச் சொல்லி யாஷிகாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. பிக் பாஸ் வீட்டில் பொன்னம்பலம் தன்னை மருத்துவராகவே நினைத்து வாழ்ந்து வருகிறார். யாருக்கு வயிறு வலித்தாலும், வாய் வலித்தாலும் ஏதாவது ஒரு நாட்டு மருத்துவம் சொல்லி, அதைப் பின்பற்றும் வழிமுறையையும் சொல்லிப் பாடம் எடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.  

* சென்றாயன், தனக்கு நிகழ்ந்த சோகமான ஒரு சம்பவத்தை மஹத்திடம் சொல்லி வருந்திக்கொண்டிருந்தார். `நாட்டு மருத்துவமனை'யில் தேனீ டாப்பிக் வர, `எனக்கு இப்படித்தான் ஒருமுறை வாயில தேனீ கடிச்சுப் பெருசா வீங்கீடுச்சு!. அந்நேரம் பார்த்து ஒரு விழாவுக்கு வேற வரச் சொல்லியிருந்தாங்க. நான் மூஞ்சியை மறைச்சுக்கிட்டு போறதைப் பார்த்து, `இவருக்கு எவ்ளோ குசும்பு பார்த்தியா... கண்டுக்காம போறார்'னுலாம் என்னைக் குறை சொல்லிட்டிருந்தாங்க.' எனச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார், சென்றாயன். மற்றவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு இவரது கதையைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 

மஹத் - சென்றாயன்

* ஒரு வழியாக அந்த நான்கு பேருக்கும் என்ன மாதிரியான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிந்துவிட்டது. ஒருமுறை யாஷிகாவுக்கும், டேனியலுக்கும் வெங்காயம் வெட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டது அல்லவா, அதேபோல்தான் இவர்களுக்கும். ஆனால், இந்தமுறை சற்று வித்தியாசம் இருந்தது!. மும்தாஜ், வரிசையில் ஷூக்களை அடுக்கி வைத்து, ஒவ்வொரு ஷூவுக்கும் பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தார். மற்ற மூவருக்கும் இதே டாஸ்க்தான் போல. பாவம் பேட்டா! மஹத், சிம்புவின் நண்பன் என்பதை இன்றுதான் நிரூபித்திருக்கிறார். `கடவுள்தான் நம்மளை உருவாக்கியிருக்கார். நமக்கு எதைக் கொடுக்கணும், கொடுக்கக் கூடாதுனு அவருக்குத் தெரியும். அவர்கிட்ட, அது வேணும் இது வேணும்னு நாம கேட்கவே கூடாது. கடவுள்கிட்ட நான் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லணும். நன்றி இறைவா... எனக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்ததுக்கு நன்றி. பேன்ட், சட்டை போட்டிருக்கேன் நன்றி. ஏ.சி இருக்கு நன்றி. இந்த வீடு இருக்கு நன்றி. காத்து இருக்கு நன்றி. சந்தோஷமா இருக்கேன் நன்றி..." என நன்றிகளை அடுக்கிக்கொண்டே இருந்தார். `என்னதான்டா சொல்ல வர்ற???' எனத் தலையைச் சொரிந்தபடி அனைத்தையும் பொறுமையாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார், சென்றாயன். 

நேற்று வரை போர்க்களமாக இருந்த பிக் பாஸ் வீடு, தற்போது சாந்தமாகியிருக்கிறது. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பிரளயம் வெடிக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற