Posted by Editor on August 13, 2018

துருக்கியின் நாணயம் வலுவிழந்ததற்கு அமெரிக்காவே காரணம் என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துவான் சாடியுள்ளார். அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கப்போவதாகவும் அவர் சூளுரைத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் அண்மை நாட்களாக மோசமான விரிசல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அமெரிக்கப் பாதிரியார் ஒருவர் துருக்கியில் வழக்கு விசாரணையை எதிர்நோக்குகியுள்ள நிலையில் அவரை விடுவிக்க துருக்கி மறுத்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான துருக்கியின் இரும்பு, அலுமினியப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரியை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்த இழுபறியில் துருக்கிய நாணயமான லிரா மோசமாக வலுவிழந்துள்ளது.

அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என துருக்கி எச்சரித்துள்ளது.

“அமெரிக்காவின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பாதிக்கும் என்பதை அந்நாடு தெரிந்துகொள்ள வேண்டும்” என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சககம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

ஏற்கனவே உள்நாட்டு அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் துருக்கி இதனால் மேலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதியுள்ள எர்துவான், அமெரிக்கா தனது நிலையை மாற்றாவிட்டால் துருக்கி புதிய நட்புகள் மற்றும் கூட்டணிகளை நாடும் என்று எச்சரித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட துருக்கி தொழிலாளர் கட்சியுடன் தொடர்புபட்டதாகவும் 2016 ஆம் ஆண்டு தோல்வியுற்ற இராணுவ சதிப்புரட்சியின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் குலன் அமைப்புடன் தொடர்புபட்டிருப்பதாகவும் கூறப்படும் அன்ட்ரூ ப்ரூன்சன் என்று பாதிரி கடந்த இரண்டு ஆண்டுகளாக துருக்கி சிறையில் உள்ளார்.

எனினும் இந்த பாதிரியார் விவகாரம் மட்டுமன்றி சிரியா தொடர்பிலான கொள்கை மற்றும் ரஷ்யாவுடனான உறவு போன்ற விடயங்களிலும் நேட்டோ கூட்டணி நாடுகளான துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பிளவு அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலருக்கு இணையாக துருக்கியின் லிரா மதிப்பு 16 வீதம் வீழ்ச்சி கண்டது.

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற