Posted by Editor on August 13, 2018

யால தேசிய சரணாலயம் இரு மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான இரு மாத காலங்களுக்கு, யால தேசிய சரணாலயத்தின் வலய இலக்கம் 01 (Block 01) மூடப்படவுள்ளதோடு, ஏனைய பகுதிகள், சுற்றுலா பயணிகளுக்காக திறந்திருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சரணாலயத்தில் காணப்படும் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே, சரணாலயத்தின் குறித்த வலயம் மூடப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த வலயம் மீண்டும் நவம்பர் 01 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், செப்டெம்பர் 23 - 25 வரையான மூன்று நாட்களில், திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியிலான யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதனால், திணைக்களத்திற்கு சொந்தமான அனைத்து சுற்றுலா தங்குமிடங்களும் குறித்த மூன்று தினங்களும் மூடப்பட்டிருக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற