Posted by Editor on August 13, 2018

எதிர்காலத்தில் விளையாட்டு உலகில் பிரகாசிப்பதற்காக எமது நாட்டிலுள்ள திறமையான இளம் வீர வீராங்கனைகளை தேசிய மட்டத்துக்கு அறிமுகப்படுத்தி அவர்களுக்கு உதவும் 'Crysbro Next Champ' தேசிய விருது விழா அடுத்த வருட ஆரம்பத்தில் மிக கோலாகலமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கனிஷ்ட மட்ட விளையாட்டு போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய 30 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இதுதவிர அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேவையான உதவிகளை செய்து கொடுப்பதே இந்த விருது விழாவின் நோக்கமாகும்.

தேசிய கனிஷ்ட பாடசாலை மெய்வல்லுனர் சங்கம்,விளையாட்டு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் உதவியுடன் இந்த விருது விழாவுக்கான வீரர்கள்,தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த விருது விழாவில் 100 மீற்றர் ஓட்டப்போட்டி,400 மீற்றர் ஓட்டப்போட்டி,உயரம் பாய்தல் போட்டி,சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான Crysbro Next Champ விருதுகள் அடங்கலாக மொத்தமாக 30 விருதுகள் வரை திறமையை வெளிப்படுத்தும் இளம் வீர வீராங்கனைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த தேசிய விருது விழாவுக்கு முன்னேற்பாடாக Crysbro Next Champ நிகழ்ச்சி பிரதி சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு சனல் ஐ (Channel Eye) அலைவரிசையில் ஒளிபரப்படுகின்றது. Crysbro Next Champ முகநூல் பக்கம் ஊடாக பொருளாதார உதவிகள் தேவையான வீர வீராங்கனைகளுக்கு மக்களின் ஒத்துழைப்புடன் நிதி உதவியும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படுகின்றது.

மார்ச் மாதம் ஆரம்பமான இந்த திட்டம் ஊடாக வீர வீராங்கனைகளை அறிமுகப்படுத்தல், புகழ் பெற்ற வீர வீராங்கனைகளின் அனுபவ அறிவை புதிய வீரர்களிடையே பகிர்ந்து கொள்ளல், வீரர்களுக்கான உடல் மற்றும் போஷாக்கு தொடர்பான அறிவுரை வழங்குதல், சர்வதேச வீர வீராங்கனைகள் பெற்ற வெற்றிகளுக்கான காரணம் போன்றவற்றை எடுத்துரைத்தல் இதில் அடங்குகின்றது. Crysbro Next Champ செயற்திட்டம் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வெற்றிகளை எமது நாட்டுக்கு கொண்டு வந்த 20 வீர வீராங்கனைகள் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இலங்கை சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் குறைவாகவே தற்போது பங்குபற்றுகின்றது. எமது நாடு இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களையே வென்றெடுத்துள்ளது. 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் சுசந்திகா ஜயசிங்க வென்றெடுத்த பதக்கத்துக்கு பிறகு இதுவரை ஒலிம்பிக்கில் இலங்கை பதக்கமொன்றை வெல்லவில்லை. இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமையை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அவர்களை அங்கே பிரகாசிக்கச் செய்து நாட்டுக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே கிறிஸ்ப்றோ நிறுவனம் 'Crysbro Next Champ' என்ற விருது விழாவை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோரிஸ் செலர்,'திறமைகள் கொண்ட வீர வீராங்கனைகள் எமக்கு உள்ளனர். ஆயினும் பொருளாதார நிலைமை காரணமாக அவர்களில் பலர் விளையாட்டுக்கு விடை கொடுக்கின்றனர். அத்தகைய திறமையான வீரர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே 'Crysbro Next Champ' நிகழ்ச்சியை நாம் ஆரம்பித்தோம். தேசிய கனிஷ்ட பாடசாலை மெய்வல்லுனர் சங்கம்,விளையாட்டு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் உதவியுடன் விருது வழங்கும் விழாவுக்கு வீர வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்' என கூறினார்.

1972 ஆம் ஆண்டு 100 கோழி குஞ்சுகளுடன் ஆரம்பமான கிறிஸ்ப்றோ அன்று முதலே சந்தையில் முன்னணியாக செயற்படுகின்றது. தரம், புத்துணர்வு மற்றும் நவீனமயத்துக்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து இலங்கையின் முன்னணி கோழி உற்பத்தி வர்த்தக நாமமாக முன்னேறியது. தாய் பண்ணை, குஞ்சு பொரிப்பக பண்ணை, புரொய்லர் பண்ணை மற்றும் கோழி உணவு உற்பத்தி ஆலை உட்பட படர்ந்து விரிந்த இடத்தை கிறிஸ்ப்றோ கொண்டுள்ளது. 'பண்ணையிலிருந்து கரண்டி வரை' என்ற எண்ணமே நிறுவனத்தின் தாரக மந்திரமாகும். கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் வெற்றிக்கு வெளி கோழி உற்பத்தியாளர்கள், சோளம் உற்பத்தியாளர்கள் போன்று இலங்கை வாடிக்கையாளர்களும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற