Posted by Editor on March 08, 2017

மலேசியா (Malaysia)

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. இந்த நாடு தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு.

மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மாநிலங்களும் இணைந்துள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்).

 

பாலி (Bali) 

இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனீசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தென்பசார் என்பதாகும்.

இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன.

இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.

 

பேங்காக் (Bangkok)

தாய்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தாய்லாந்தின் மொழியில், குருங் தேப் மஹா ந கொன் (กรุงเทพมหานคร) என வழங்கப்படுகிறது. இதில் குருங் தேப் என்ற தாய்ச் சொல்லின் பொருள், "தேவதைகளின் நகரம்" என்பதாகும். மத்திய தாய்லாந்தின் சாவோ பிரயா ஆற்றுப் படுகையில் 1,568.7 square kilometres (605.7 sq mi) பரப்பளவில் அமைந்துள்ள பேங்காக்கில் 9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

இது தாய்லாந்தின் மக்கள்தொகையில் 12.6 வீதமாகும். பேங்காக் பெருநகர மண்டலம் எனப்படும் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்து 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

இன்று, தெற்கிழக்காசியாவில், மிக முக்கியமான வர்த்தக மையமாக பேங்காக் விளங்குவதோடு, பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்துள்ள பயண நுழைவாயிலாகவும் விளங்குகின்றது.

இங்கு மிகவும் உயர்ந்த செலவில் அலங்கரிப்பட்டுள்ள 400 புத்தர் கோயில்கள் காணப்படுவதோடு, ஆசியாவிலேயே மிகப் பெரியளவான விற்பனை வளாகங்களும் காணப்படுகின்றன. அத்தோடு இங்கு ஆறு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இங்கு காணப்படும் எண்ணிலடங்கா கால்வாய்களினால், மிதக்கும் சந்தைகள் பலதையும் உருவாக்கின்ற தளமாகவிருக்கிறது.

இதனால், பேங்காக், "கிழக்கின் வெனிசு" என்று வழங்கப்படுவதுமுண்டு.

 

சிங்கப்பூர் (Singapore /The Republic of Singapore)

தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயமான நாடாகும் . 

சிங்கப்பூரின் உத்தியோகபூர் மொழிகளாக ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியன காணப்படுகின்றன. சார்க் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஏப்பெக் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன், கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகள் ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது.

மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அந்த வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த நாடாக திகழ்கின்றது.
 

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற